Wednesday, August 26, 2009

வேகமாக இடம் பெறும் சர்ச் என்ஜின் பிங்


மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் சந்தோஷமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்ச் இஞ்சினுக்கு எதிராகத் தயாரித்து அண்மையில் வெளியிட்ட தன்னுடைய பிங் (BING) சர்ச் இஞ்சின் உலகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வரும் முதல் 20 இணைய தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது. அறிமுகமாகி இரண்டு மாதங்களில் இந்த இமாலய வளர்ச்சியை இந்த சர்ச் இஞ்சின் பிடித்தது அனைவரையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் புதுக் கண்ணோட்டத்துடன் பார்க்க வைத்துள்ளது.
இணைய தளங்களையும் அவற்றை வந்து பார்த்துச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கண்காணித்து வரும் புகழ் பெற்ற அலெக்ஸா அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிங் சர்ச் இஞ்சினுடைய முன்னோடியான விண்டோஸ் லைவ் சர்ச் இன்னும் ஐந்தாவது இடத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தளத்திற்கு வரும் தேடல்களெல்லாம் முழுமையாக பிங் தளத்திற்கு திருப்பிவிடப்பட இருக்கின்றன.

முதல் 20 இடத்திற்குள் பிங் வந்துவிட்ட தனாலேயே கூகுள் கலக்கமடையுமா? கூகுள் சர்ச் இஞ்சின் இன்னும் முதல் இடத்திலேயே அதிக பலத்துடன் அமர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் யாஹூவும் அதனை அடுத்து கூகுளின் இன்னொரு சொத்தான யு–ட்யூப் அமர்ந்துள்ளன. இருப்பினும் இரண்டு மாதத்தில் பிங் பெற்றுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கதுதான்.

ஆனால் கூகுளை அசைக்க இன்னும் அது அசாத்திய வளர்ச்சியைப் பெற வேண்டும். தான் தரும் வசதிகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். மொத்தப் பயன்பாட்டில் கூகுள் இன்னும் பலரும் தொட முடியாத உயரத்தில்
உள்ளது

1 comment:

競馬予想 said...

ほえ?

どこの国の人??

by 通りすがりの主婦 パート