Tuesday, April 28, 2009

பன்றி காய்ச்சல் ( Swine Virus) பரவுவது எப்படி?

பன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது. இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.

இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.

வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.

இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.

பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.

1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.

நோய் அறிகுறிகள்

* இடைவிடாத காய்ச்சல்

* மூக்கில் நீர்வடிதல்

* தொண்டையில் வலி

* வயிற்று போக்கு

* மயக்கம்

* பசியின்மை

* சளி தொல்லை

* சாப்பாடு மீது வெறுப்பு

* வாந்தி எடுத்தல்

Monday, April 27, 2009

சீனி நம்முடைய உடலுக்கு தேவையில்லை..!னிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.

சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.

கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.

அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.

காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.

காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்


நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

"குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!" என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.

"நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. "நாடி ஓட்டப் பாதை" என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம். நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம்.

இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்! பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர்.

அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள். இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்! நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

Wednesday, April 22, 2009

வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்;ஆராய்ச்சியில் தகவல்


குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார்.அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது.

வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும்,வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது.

பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும்.இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன.

போர் பகுதிகளில் சிக்கி இருப்பவர்கள்,மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் ஆகியோருக்கும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கின்றன.

நன்றி : விடுப்பு

Sunday, April 19, 2009

கோபம் கொல்லும்


பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பெரும்பாலும் மனிதனுடைய கோபம் வெளிப்படும் இடம் குடும்பம் என்றாலும் அது வீடுகளில் வெடிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே வெகு நேரம் காத்திருக்கிறது.

கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறது.

நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு, கோபம் மட்டும் அடிக்கடி வருகிறது என வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வந்து மரணமடையும் வாய்ப்பு 19 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

அப்படியானால் ஆரோக்கியம் சிறப்பாக இல்லையென்றால் ? இந்த விழுக்காடு இருபத்து ஐந்து என எகிறுகிறதாம்.

நல்ல திடகாத்திரம், ஒழுங்கான உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கம் எல்லாம் இருந்தாலும் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லையெனில் அதோ கதி தான் என்பதையே இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

கோபப்படும் போது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் கார்சிசால் எனும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகச் சுரந்து விடுகிறது. இதுவும் மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்தும் ஒரு காரணி என இதற்கான மருத்துவ விளக்கத்தை எளிமையாய் தெரிவிக்கிறார் ஆராய்ச்சியின் தலைவர் யோய்சி சிந்தா.

இதைக் குறித்து அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சி கோபம் எப்படி இதயத்திலுள்ள மின் அமைப்பைப் பாதிக்கிறது எனும் கோணத்தில் நடந்தது.

அந்த ஆய்வின் முடிவு, கோபம் இதயத்தின் மின் நிலையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி விடுகிறது என நீள்கிறது. இவை மாரடைப்புக்குக் காரணமாகி விடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 40000 சடுதி மரணங்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் விளையாட்டுகள் இந்த நிலையற்ற மின் அதிர்வுச் சிக்கலை பல கோடி இதயங்களில் உருவாக்கி விடுகின்றன. இப்படி ஒரு சில தேசங்களை ஒட்டு மொத்தமாக ஒரு இறுக்கமான நிலைக்குள் தள்ளும் போது மாரடைப்புகள் அதிகரிக்கின்றன என தெரிவிக்கிறார் அமெரிக்க மருத்துவர் லாம்பெர்ட்.

கோபம் !! உறவுகளைக் கொல்வதுடன், தன்னையும் கொல்லும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே விடவேண்டியவை மது, புகை மட்டுமல்ல கோபமும் கூடத் தான் என்பதைக் கவனத்தில் கொள்வோம்

Wednesday, April 15, 2009

சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன்


செல்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி எரிக்ஸன் நிறுவனம் 8.1 மெகாபிக்சல் திறனுள்ள கேமராவை உள்ளடக்கிய புதிய செல்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. C905 Cyber-shot எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன், சோனி அறிமுகப்படுத்தும் முதல் ஸ்லைடர் போன் (Cyber-shot வரிசையில்) என்ற பெருமையை பெற்றுள்ளது.

sony-ericsson-c905-282x300செனான் (Xenon) ப்ளாஷ், ஃபேஸ் டிடெக்சன், ஆட்டோ ஃபோகஸ், ஸ்மார்ட் கான்ட்ராஸ்ட் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் 2.4 அங்குல scratch-resistant வண்ணத்திரை உள்ளது.

2 ஜிபி மெமரி ஸ்டிக், யுஎச்பி அடாப்டர் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளுக்கு இதில் உள்ளது, இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

ஆண்களில் வழுக்கைக்கு அம்மாக்களா காரணம்..?!ஆண்களில் பிறப்புரிமை சார்ந்து தலையில் முடி (மயிர்) உதிர்தல் (வழுக்கை) ஏற்படுவதற்கு தாயிடம் இருந்து பெறப்படும் இலிங்க நிறமூர்த்தமான (பால் தெரிவு நிறமூர்த்தங்களில் ஒன்று) X வகை நிறமூர்த்தத்தில் (chromosome) உள்ள பரம்பரை அலகே (Gene) காரணம் என்று இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது.


ஆனால் X நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகுக்கு நிகராக மனிதனில் உள்ள 23 சோடி நிறமூர்த்தங்களில் 20ம் சோடியில் உள்ள பரம்பரை அலகுகளும் செல்வாக்குச் செய்கின்றன என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டிருப்பதுடன், அங்கு காணப்படும் தந்தை வழியில் இருந்தும் தாய் வழியில் இருந்தும் பெறப்படும் பரம்பரை அலகுகளால் கூட முடி உதிர்தல் தூண்டப்படலாம் என்ற அறிதலும் பெறப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆண்களில் முடி உதிர்தலுக்கு தாய் வழி X நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகு மட்டுமன்றி தந்தை வழி பரம்பரை அலகுகளும் காரணமாக இருக்கின்றன என்பதால் தந்தைக்கு முடி உதிர்தல் அல்லது வழுக்கை இருக்கும் பட்சத்தில் மகனுக்கும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

அது மட்டுமன்றி ஆண்களில் சுமார் 14% பேர் மேற்குறிப்பிட்ட இரண்டு வகை பரம்பரை அலகுகளிலும் முடி உதிர்தலைத் தூண்டும் அலகுகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதுடன் இப்பரம்பரை அலகுகளின் தாக்கத்தால் முடியுதிர்தல் பிரச்சனை 7 மடங்கு அதிகரித்த அளவில் இளமைக் காலத்திலேயே ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறித்த ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர். மேலும் ஏதாவது ஒரு முடியுதிர்தல் பரம்பரை அலகுடன் சுமார் 40% ஆண்கள் இருக்கின்றனர்.

எனவே முன் கூட்டிய மரபணு அலகு அல்லது பரம்பரை அலகு ஸ்கானின் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு முன் கூட்டிய முடி உதிர்தலைத்தடுக்க மரபணுச் சிகிச்சை (gene therapy) உட்பட பலவகை சிகிச்சை முறைகளை ஆரம்பிக்க முடியும் அல்லது முடி மீள நாட்டல் மூலம் முடியை வளர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்..!

Tuesday, April 14, 2009

சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா.......?

மக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே காரணம்.

கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.


ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்.

நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும். எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.

முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.

இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் (Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache) போன்றவை) மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.

இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.

Monday, April 6, 2009

பாலில் உருவாகும் பாக்டீரியாபால் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது.பொதுவாக பாலை காய்ச்சி குடிப்பவர்கள் ஒருபுறம் என்றால்,வேறு சிலர் பச்சைப் பாலை (கறந்த பால்) அப்படியே குடிப்பார்கள்.ஆனால்,பச்சைப் பாலில் (raw milk) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த வெப்பநிலையிலும், குளிர்வூட்டப்பட்ட போதிலும் இந்த பாக்டீரியா வளரக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மால்கா ஹால்பெர்ன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து பச்சைப் பாலில் பாக்டீரிய இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்தவகை பாக்டீரியாவை முன்னர் ஆய்வு செய்தவர்கள் வெளியிடவில்லை என்றும் டாக்டர் மால்கா குறிப்பிட்டுள்ளார்.

கிறிசியோபாக்டீரியம் ஒரானிமென்ஸ் என்ற அந்த நுண்ணுயிரியானது குளிர்ந்த வெப்பநிலையிலும் கூட பாலில் பரவக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் பாலைக் காய்ச்சாமல் குடிப்பதால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

மாட்டில் இருந்து கறக்கப்படும் பாலானது பல்வேறு காரணங்களால் கெட்டுப் போகக்கூடும் என்பதால்,பாலை குளிரூட்டி பதப்படுத்துதலை பொதுவாக மேற்கொள்வார்கள்.

ஆனால்,குளிரூட்டப்பட்டாலும்,கிறிசியோபாக்டீரியம் காரணமாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.


Sunday, April 5, 2009

பொருள்களை பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் தீவிரம்
நம் நாட்டில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் செய்யும் கண்கட்டி வித்தையைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது எந்தளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் இந்தக் கண்கட்டி வித்தையை அறிவியல் பூர்வமாகச் செய்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.


இந்த ஆராய்ச்சியில் பொருள்களை அல்லது மனிதர்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதை நடைமுறைப்படுத்தும் இறுதிக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பொருள் அல்லது மனிதனைச் சுற்றியுள்ள ஒளிக்கதிர்களை விலகிச் செல்ல செய்வதன் மூலம் அந்தப் பொருளை அல்லது அந்த மனிதனை கண் பார்வையிலிருந்து மறையச் செய்ய முடியும். அதாவது ஆற்றின் நடுவே இருக்கும் பாறையிலிருந்து தண்ணீர் விலகிச் செல்வது போல ஒளிக்கதிர்களை அந்த பிம்பத்திலிருந்து விலகச் செய்ய முடியும் என்று தி சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் மூத்த விஞ்ஞானி சியாங் சாங் கூறியுள்ளார்.

இவ்வாறு செய்யும்போது கண் பார்வையிலிருந்து அந்த பொருளை முற்றிலுமாக மறைத்துவிடலாம்.

இதுபோன்று ஒரு பெரிய கப்பலையோ அல்லது டாங்கியையோ மறையச் செய்வதன் மூலம் போரில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பொருள்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Thursday, April 2, 2009

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!! ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!!தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல் முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Oven களில் வெப்பத்தை உண்டாக்க heater கள் இருக்கும்.

மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Oven இனுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செக்கனுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.

micro மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக்கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Ovenமூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோ - வேவினால் அசைக்க இயலாது.

எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில்வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது - ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்படவேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven இனுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம் -- மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது.

இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven இல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்?

சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது.

இவ்வாறான நிகழ்வு Microwave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven இனுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத்தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் - வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற - அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

எனவேதான், Microwave Oven களில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

சொந்தமாக கம்ப்யூட்டர் வேண்டாம் - வருகிறது கூகுள் ஜி&டிரைவ்
லேப்டாப் வாங்காமல் அவசரப்பட்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விட்டீர்களா? லேப்டாப் இருந்தாலும் அதை மறந்து விட்டு வெளியே செல்கிறீர்களா? எதுவானாலும் இனி கவலையில்லை.


இருந்த இடத்தில் இருந்து உங்கள் கம்ப்யூட்டரில் டேட்டாக்களை தொடர்பு கொள்ளும் ஜி&டிரைவ் வசதியை கூகுள் விரைவில் அறிமுகம் செய்கிறது.

கம்ப்யூட்டர் யுகத்தில் புதிய புரட்சி ஏற்படுத்தக்கூடிய இந்த வசதி பற்றி அமெரிக்க தொழில்நுட்ப செய்திக்கான வெப்சைட் கூறுகையில், ÔÔஉங்கள் கம்ப்யூட்டர் ஹார்டிரைவை தூக்கி எறியுங்கள். கூகுள் ஜி&டிரைவ் விரைவில் வருகிறதுÕÕ என்கிறது.

அதாவது, நமது கம்ப்யூட்டரில் நாம் வைத்திருக்கும் அத்தனை டேட்டாக்களையும் இன்டர்நெட்டில் கூகுள் ஏற்படுத்தித் தரும் இடத்திலும் ஸ்டோர் செய்து வைக்கலாம். அதன்மூலம், இருக்கும் இடத்தில் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் இருந்தால் போதும். ஜி&டிரைவ் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்களை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வசதியில் இமெயில், போட்டோக்கள், இசை, தகவல் பைல்கள் என சகலமானவற்றையும் தொடர்பு கொள்ள முடியும். கூகுள் இப்போது அளித்து வரும் வசதிகளுடன் கூடுதலாக இந்த சேவையும் கிடைக்கப் போகிறது.

நன்றி :விடுப்பு