Thursday, May 28, 2009

பன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்; ஆயுர்வேத நிபுணர்கள் தகவல்



உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட பன்றிக்காய்ச்சலை துளசி இலைகள் ஒன்றிரண்டு நாட்களில் விரட்டி அடித்து விடும் என்கிறார்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஆயுர்வேத நிபுணர்கள்.

பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் யு.கே.திவாரி கூறும் போது, வைரஸ் மூலம் பரவும் தொற்று நோய்களை "துளசி" மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். இதே போல் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதும் எளிது.

துளசி இலைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தொற்று நோய் கிருமிகளும் அடியோடு ஒழியும் என்றார்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் புபேஸ் பட்டேல் கூறும்போது:-

"துளசி" இலைகள் மூலம் பன்றிக் காய்ச்சலை மிக எளிதாக குணப்படுத்தி விடலாம். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 20 அல்லது 25 துளசி இலைகளை தினமும் 2 தடவை சாப்பிட வேண்டும்.

இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்தவித தொற்றுக்கிருமியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்றார்.

நன்றி : விடுப்பு

Sunday, May 24, 2009

ஆண்களுக்கு எங்கும் சோதனை தான்; பெண்களே நோய் எதிர்ப்பு சக்தி கூடியவர்கள்


இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களை விட நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் அதிகம் என்று கனடிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரினாம வளர்ச்சியில் இயற்கை பெண்ணுக்கு அளித்துள்ள முக்கிய பொறுப்பான வளமான சந்ததியை உருவாக்குதல் என்ற நோக்கத்தை திறம்பட நிவர்த்தி செய்ய பெண்களை நோய்களின் தாக்கத்திலின்றும் பாதுகாக்க வேண்டியது முக்கியமாகிறது.

அதற்காகவே அமைந்தது போல பெண்களின் பெண்மைக்கு முக்கிய காரணமான ஈஸ்ரோஜன் (Oestrogen) எனும் ஓமோன் (female sex hormone) அவர்களில் நோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியையும் அதிகரிக்கச் செய்வது இந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓமோன், Caspase-12 எனும் நோய் எதிர்ப்புத் தாக்கத்தை குறைக்கும் நொதியத்தை (enzyme) உருவாக்கும் Caspase-12 மரபணு அலகின் தொழிற்பாட்டை தடுப்பதன் மூலம் பெண்களில் குறித்த நொதியத்தின் உருவாக்கத்தை நிறுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

ஆனால் ஆண்களில் மேற்குறிப்பிட்ட ஓமோன் இல்லாத காரணத்தால் அவர்கள் தடிமன் போன்ற நோய்களை உருவாக்கும் வைரஸ் நோய்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும், பக்ரீரிய நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும் பெண்களை விட கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.

இயற்கையில் மட்டுமன்றி சுகாதார வாழ்விலும் ஆண்களை விட பெண்களுக்கே அநேக மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகவும் முன்கூட்டியும் கிரமமாகவும் வழங்கப்படுகின்றன. பல நோய்கள் ஆண்களைப் அதிக அளவில் பீடிக்க அவர்கள் மீது கட்டாய கிரமமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையும் ஒரு காரணமாகும்.

இதன் காரணமாகவோ என்னவோ இன்றைய நவீன மருத்துவ உலகில் பெண்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்களை விட அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 20, 2009

புற்றுநோய் கலங்களை பரவ விடும் ஜீன் கண்டுபிடிப்பு


புற்றுநோய் உடலின் ஓரிடத்தில் உருவானால் அது அங்கிருந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு அல்லது பகுதிகளுக்கு பரவும் இயல்பைக் கொண்டது. இதனாலேயே அதனை பூரணமாகக் குணப்படுத்த முடியாமல் அதிக புற்றுநோய் மரணங்கள் ஏற்படுகின்றன.

எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து மார்பகப் புற்றுநோய்க் கலங்கள் மூளைக்கும் பரவ அனுமதிக்கும் மரபணு அலகை (ஜீனை-Gene) ஆய்வாளர்கள் கண்றிந்துள்ளனர்.

வழமையாக மூளையில் காணப்படும் மிக நுட்பமான இரத்த நுண்குழாய்கள் கொண்டமைக்கப்பட்ட குருதி-மூளைப் பாதுகாப்பு வேலிகள் மூளையினுள் நுண்குருமிகள் உட்பட எமது உடலில் சுற்றியோடும் குருதியில் உள்ள கூறுகளைக் கூட வடிகட்டலின்றி அனுமதிப்பதில்லை.

ஆனால் மார்பகப் புற்றுநோய் கலங்கள் எப்படியோ மூளைக்குள் ஊடுருவி விடுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட ஒரு மரபணு அலகு தான் அதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

ஏலவே மார்பகப் புற்றுநோய் கலங்கள் சுவாசப்பைக்குள் ஊடுருவி இரண்டாம் நிலை புற்றுநோய் தாக்கம் ஏற்பட அனுமதிக்கும் மரபணு அலகுகள் இரண்டு இனங்காணப்பட்டுள்ள நிலையில் இந்த மரபணு அலகு (ST6GALNAC5)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மரபணு அலகின் தொழிற்பாடு காரணமாகவே புற்றுநோய் கலங்கள் மூளையின் குருதி நுண்குழாய்களில் ஒட்டிக் கொண்டு அதன் பின் அங்கிருந்து மூளையின் இழையப்பகுதிக்குள் நகர்ந்து பெருக ஆரம்பித்துவிடுகின்றனவாம்.

இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் ஆரம்பக்கட்டத்தில் எலிகள் மட்டத்தில் இருப்பினும் எதிர்காலத்தில் புற்றுநோய் தாக்கம் கண்ட கலங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகர்வதைத் தடுக்க மருந்துகளை கண்டறிய இது நல்ல அடிப்படையாக அமையும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புற்றுநோயை பூரணமாகக் குணப்படுத்துவதில் அது ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு பரவி விடுவதே மிகச் சவாலான அம்சமாக இருந்து வருகிறது.
நன்றி - விடுப்பு

Thursday, May 14, 2009

புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட ஆயுள்: ஆய்வுத் தகவல்


புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழலாம் என பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகைபிடிக்காதவர்கள் உடல்நிலை குறித்து ஓஸ்லோ பல்கலைக்கழகமும், நார்வே பொதுசுகாதார நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.

முப்பது ஆண்டுகளாக நார்வே நாட்டு மக்களில் புகைப்பழக்கம் உள்ள நடுத்தர வயது ஆண், பெண்களிடம் 1974 முதல் தொடர்ந்து நடத்திய ஆய்வில், புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழமுடியும் என்றும், இவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரியவந்துள்ளது.

ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஓஸ்லோ பல்கலைக்கழக ஆசிரியர் ஹாகோன் மேயர் புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த படத்தினை வெளியிட்டிருப்பதாகக் கூறினார்.