Sunday, August 30, 2009

உங்களுடைய மீடியாபிளேயரை இணைய உலாவியிலிருந்தே இயக்குவது எப்படி?


நீங்கள் இணையத்தில் அதிகம் வலம் வருபவரா? அதுவும் பாடல்களை ஒலிக்க விட்டே இணையத்தில் இருப்பவரா? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால் உங்களுக்காகவே இருக்கிறது ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Foxy tunes.

இது Internet Explorer, Mozilla Firefox உடன் வேலைசெய்கிறது. இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் உங்களது மீடியாபிளேயரை இணைய உலாவில் இருந்துகொண்டே இயக்கலாம். உங்களிடம் இருக்கும் பாடல்களை உங்களது மீடியா பிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியா பிளேயரை மினிமைஸ் செய்துவிட்டு இணைய உலாவியில் இருக்கும் Foxy Tunes மூலமாக இயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில் உபயோகித்தால் யூ‍‍-டியூப் தளத்தின் playlist கூட கையாள‌முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

Wednesday, August 26, 2009

வேகமாக இடம் பெறும் சர்ச் என்ஜின் பிங்


மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் சந்தோஷமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்ச் இஞ்சினுக்கு எதிராகத் தயாரித்து அண்மையில் வெளியிட்ட தன்னுடைய பிங் (BING) சர்ச் இஞ்சின் உலகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வரும் முதல் 20 இணைய தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது. அறிமுகமாகி இரண்டு மாதங்களில் இந்த இமாலய வளர்ச்சியை இந்த சர்ச் இஞ்சின் பிடித்தது அனைவரையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் புதுக் கண்ணோட்டத்துடன் பார்க்க வைத்துள்ளது.
இணைய தளங்களையும் அவற்றை வந்து பார்த்துச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கண்காணித்து வரும் புகழ் பெற்ற அலெக்ஸா அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிங் சர்ச் இஞ்சினுடைய முன்னோடியான விண்டோஸ் லைவ் சர்ச் இன்னும் ஐந்தாவது இடத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தளத்திற்கு வரும் தேடல்களெல்லாம் முழுமையாக பிங் தளத்திற்கு திருப்பிவிடப்பட இருக்கின்றன.

முதல் 20 இடத்திற்குள் பிங் வந்துவிட்ட தனாலேயே கூகுள் கலக்கமடையுமா? கூகுள் சர்ச் இஞ்சின் இன்னும் முதல் இடத்திலேயே அதிக பலத்துடன் அமர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் யாஹூவும் அதனை அடுத்து கூகுளின் இன்னொரு சொத்தான யு–ட்யூப் அமர்ந்துள்ளன. இருப்பினும் இரண்டு மாதத்தில் பிங் பெற்றுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கதுதான்.

ஆனால் கூகுளை அசைக்க இன்னும் அது அசாத்திய வளர்ச்சியைப் பெற வேண்டும். தான் தரும் வசதிகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். மொத்தப் பயன்பாட்டில் கூகுள் இன்னும் பலரும் தொட முடியாத உயரத்தில்
உள்ளது

Monday, August 24, 2009

டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள்




கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.

பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.

எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

Tuesday, August 18, 2009

செல்பேசியின் மூலம் அதிவேகமாக இணையம் உபயோகிக்க


செல்பேசியில் இணையத்தை உபயோகிப்பதை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். ஆனால் செல்பேசியில் இணையத்தை உபயோகிப்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன.

முக்கியமாக அதன் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். அனைத்து முகவரிகளையும் பார்க்க இயலாது. இந்த குறைகளை போக்குவதற்கு என்றே தயாரிக்கப்பட்டது தான் ஒபோரா மினி என்னும் மென்பொருள். இதன் மூலம் நீங்கள் கணினியில் அப்படி இணையத்தை பயன்படுத்துகிறீர்களோ அதை போலவே உங்கள் செல்பேசியிலும் உபயோகிக்கலாம். கீழே உள்ள முகவரிக்குச் சென்று உங்கள் செல்பேசியின் நிறுவனத்தை (model) தேர்வு செய்து தரவிக்கம் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் கணினி நேரடியாக தரவிறக்கம் செய்து விட்டு பின்பு உங்கள் செல்பேசிக்கு cable அல்லது bluetooth மூலமாக upload செய்து உபயோகியுங்கள்

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

Sunday, August 16, 2009

மால்வேர் புரோக்கிராம்கள் : அன்றிலிருந்து இன்று வரை


அண்மையில் அருமையான ஓர் இணைய தளம் ஒன்றைப் பார்த்தேன். நம் கம்ப்யூட்டரையும் நம்மையும் பயமுறுத்தும் பாதுகாப்பு குறித்து நம்மை அப்டேட் செய்திடும் வகையில் அந்த தளம் செயல்படுவதனைக் கண்டு கொண்டேன்.

InternationalMalwareThreatCenter என அழைக்கப்படுகிறது. இது இணையச் செயல்பாட்டினை மானிட்டர் செய்திடும் ஒரு தளமாக இயங்குகிறது. இதில் கம்ப்யூட்டரை அவ்வப்போது அச்சுறுத்தும் மால்வேர் புரோகிராம்களைப் பற்றி விலாவாரியாகக் கூறுகிறது.

ஒவ்வொரு மோசமான மால்வேர் புரோகிராமும் எப்போது வந்தது; எந்த அளவில் மோசமானது; அதனை எதிர்க்கும் பணியினை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்; அதனைத் தவிர்க்க என்ன செய்திடலாம் என்பது போன்ற தகவல்களை சரியான புள்ளி விபரங்களுடன் தருகிறது. எனவே ஏதேனும் ஒரு மால்வேர் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டு அது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் உடனே இந்த தளத்தினை அணுகலாம். அந்த மால்வேர் புரோகிராமின் பெயரைக் குறிப்பிட்டு அது எங்கிருந்து வருகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது.

அத்துடன் குறிப்பிட்ட மால்வேர் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டருக்குள் நெருங்கவிடாமல் இருக்க அது வரும் ஐ.பி. முகவரியினைத் தந்து அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் அனுமதிக்காமல் செட் செய்திடும்படி கூறுகிறது. பிஷ்ஷிங் மற்றும் வேறு வகைகளில் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராம்களை அனுப்புவோரின் பொதுவா ன டொமைன் பெயரையும் குறிப்பிடுகிறது.

இப்போது உலா வந்து கொண்டிருக்கும் மால்வேர் புரோகிராம்களைக் குறிப்பிட்டி இவற்றிற்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர்களை யார் தயாரித்து வழங்குகிறார்கள் என்ற தகவலும் இங்கு கிடைக்கிறது. இதனை அறிந்து கொண்டு அத்தகைய தளங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம் இல்லையா!

எனவே தங்கள் கம்ப்யூட்டர் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த தளம் அரிய தகவல்களைத் தரும் தளமாக உள்ளது.தடுக்கிறோமோ இல்லையோ கெடுதல் விளைவிப்பவர்கள் குறித்து அறிந்து கொள்வது நல்லதுதானே.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

Tuesday, August 4, 2009

புளு-ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களை தயாரிக்க இலவச மென்பொருள்


சிடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிக்க அதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தேடுகிறீர்களா? அதுவும் இலவசமாக! மேலும் கூடுதல் வசதிகளாக புளு ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களையும் தயாரிக்கும் வசதி கொண்டதாகத் தேடுகிறீர்களா! ஆஹா! இத்தனையும் இலவசமா என்று வியப்படையாதீர்கள். சிடி பர்னர் எக்ஸ்பி என்ற புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் சிஸ்டம் ஒத்துழைத்தா புளு ரே மற்றும் எச்.டி –டிவிடிக்களையும் தயாரித்து வழங்குகிறது.

இதன் லேட்டஸ்ட் பதிப்பு (4.2.4) ஆக கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தி டலாம். மற்ற சிடி பர்னர்களைக் காட்டிலும் இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் எந்தவிதமான விளம்பர புரோகிராம்கள் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களோ இணைந்து வருவதில்லை.

கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் தொடக்க திரையில் ஐந்து பட்டன்கள் உள்ளன. அவை Data Disc, Audi Disc, Burn ISO image, Copy Disc and Erase Disc. ஆகியனவற்றினைத் தேர்ந்தெடுக்கத் தரப்பட்டிருக்கும் இன்டர்பேஸ் ஆகும். இதில் எது உங்கள் வேலைக்குச் சரியான பட்டனோ அதனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக நீங்கள் டேட்டா பைல்களைக் கொண்டு சிடி உருவாக்கப் போகிறீர்கள் என்றால் இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன் கிடைக்கும் விண்டோவில் மேலும் இரு பட்டன்கள் உள்ள ஆப்ஷன் திரை கிடைக்கும். பின் அதன் வழியே சென்றால் எளிதாக சிடி பர்ன் செய்யலாம்.


இந்த புரோகிராமினை விண் டோஸ் 2000 ல் தொடங்கி இன்றைய விஸ் டா ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் வரையில் இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்திடும் முன் உங்கள் சிஸ்டத்தில் .net framework இருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது இல்லை என்றால் இந்த புரோகிராம் சரியாகச் செயல்படுவதில்லை.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
நன்றி : விடுப்பு

Sunday, August 2, 2009

google க்கு போட்டியாக இணையும் Yahoo - Mirosoft!


சில வருடங்களின் வதந்திகளுக்கு பிறகு முதல் முறையாக யாஹூவும் மைக்ரொசொப்டும் தேடல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயட்பட உள்ளதாக அறிவித்துள்ளன. இன்றிலிருந்து சில மாதங்களில் Yahoo Search ஆனது Microsoft இன் Bing தேடு பொறியின் அணுசரனையில் இயங்க தொடங்கும். 10 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த பேரத்தினால் Yahoo சுமார் $275 million லாபத்தை எதிர்பார்க்கிறது. இரு தரப்பிலும் பல பயனுள்ள மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மற்றும் விளம்பர வருவாய் தரக்கூடிய மாற்றங்கள் இணையத்தள உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Google இற்கு போட்டியாக கருதப்படும் இந்த ஒப்பந்தம் சிலவேளைகளில் யாகூவின் இன்னொரு பின்னடைவாக கூட அமையலாம் என கணணி வல்லுனர்களால் ஊகங்கள் எழுந்துள்ளன.

நன்றி : விடுப்பு