Monday, June 22, 2009

குறைந்த கட்டண கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தும் ஏர்டெல்


வெறுமனே டைப்பிங், சாட்டிங், இமெயில், பிரவுசிங் மட்டுமே மேற்கொள்வதற்காக ஒரு கம்ப்யூட்டரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?. அப்படியானால் இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனம் நெட் பிசி என்ற புதிய வகை சாதனைத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகவும் குறைந்த விலையிலான கம்ப்யூட்டராகும்.

இந்த கம்ப்யூட்டரை வின்டோஸ் எக்ஸ்பி மூலம் இயக்கலாம். இதன் விலை இந்திய மதிப்பில் ஜஸ்ட் ரூ. 5000 மட்டுமே.

இந்த குட்டி கம்ப்யூட்டரை இயக்க முதலில் புஎஸ்பி மோடம் அல்லது பிராட்பேன்ட் ஈத்தர்நெட் கேபிளுடன், இந்த நெட் பிசியை இணைக்க வேண்டும். அவ்வளவுதான், அப்படியே போய்க் கொண்டிருக்கலாம்.

இதன் எடை அரை கிலோதான். சைஸ், 11.5 செ.மீ x 11.5 செ.மீ. x 3.5 செ.மீ மட்டுமே. அதாவது இந்த சாதனத்தை, உங்களோட பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு 'ஜம்க்கா ஜம்க்கா' என்று நடந்து போகலாம்.

இந்த குட்டியூண்டு கம்ப்யூட்டர் சாதனத்தில், கூகுள் டாக்குமென்ட்டுகள் ஏற்கனவே லோட் செய்யப்பட்டுள்ளன. எனவே இன்டர்நெட் இணைப்பு இல்லாமலும் கூட நீங்கள் இதில் ஒர்க் செய்ய முடியும்.

இதை தற்போது சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே நீங்கள் இந்த சாதனத்தை பயன்படுத்துவதாக இருந்தால் மாதந்தோறும் ஒரு தொகையை வாடகையாக செலுத்த வேண்டும். ஏர்டெல் பிராட்பேன்ட் இணைப்புக்கான பில்லுடன் சேர்த்து இந்தத் தொகையையும் கட்டலாம்.

பிளான்கள் என்னென்ன தெரியுமா..?

இந்த சாதனத்தை பயன்படுத்துவோருக்காக பல்வேறு பிளான்களையும் அறிவித்துள்ளனர்.

குறைந்த பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 700 ஆகும். இதில் ரூ. 200 சாப்ட்வேருக்கான வாடகைக் கட்டணம். மீதம் உள்ள ரூ. 500 பிராட்பேன்ட் இணைப்புக்கானது.

இந்த பிளானை தேர்வு செய்தால் உங்களுக்கு 256 கேபிஎஸ் வேகத்திலான 3ஜிபி டேட்டா பரிமாற்றம் கிடைக்கும், 10 ஜிபி ஆன்லைன் ஸ்டோரேஜ் கிடைக்கும், ஒரு ஸ்டான்டர்ட் மைக்ரோசாப்ட் ஆபிஸ் கிடைக்கும். அவுட்லுக்கும் உள்ளடங்கியிருக்கும்.

இந்த சாதனத்தில் உள்ள ஒரு குறை, வேறு எந்த புதிய சாப்ட்வேரையும் நீங்கள் இதில் ஏற்ற முடியாது என்பதுதான். எனவே கூகுள் குரோம், பயர்பாக்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

வாங்கித்தான் பாருங்களேன்...

நன்றி : விடுப்பு