Wednesday, December 22, 2010

ஜிமெயிலில் அற்புதமான புதிய வசதி


கூகுள் தேடுதல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்கையில், நாம் ஏதேனும் எழுத்துப் பிழை ஏற்படுத்தினால், உடனே கூகுள் “Did you mean” எனக் கேட்டுச் சரியான எழுத்துக்களுடன் அந்த தேடலுக்கான சொல் அல்லது சொல் தொடர்களை அமைக்கும்.

அல்லது இப்படி அமைத்துத் தான் தேட விரும்புகிறீர்களா? என்று பொருள்பட நமக்கு சில காட்டப்படும். பெரும்பாலும், கூகுள் அமைத்திடும் சொற்கள் சரியாகவே அமையும். இதன் மூலம் நாம் தவறு செய்தாலும், சரியான தேடலுக்கு இது உதவிடுகிறது.

இப்போது இந்த வகை உதவி, ஜிமெயில் தேடலுக்கும் வழங்கப்படுகிறது.

இமெயில் இன்பாக்ஸ் அல்லது மற்ற பெட்டிகளில் நாம் காண விரும்பும் டெக்ஸ்ட் உள்ள இமெயில்களைப் பார்த்திட, சில சொற்களை அமைத்துத் தேடுகையில், இதுதானா நீங்கள் தேடுவது என, வேறு சில சொற்களும் காட்டப்படுகின்றன.

சொற்களில் எழுத்துப் பிழை இருக்கையில், சரியான எழுத்துக்களுடன் சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் நம் தவறுகள் திருத்தப்படுகின்றன. தேடல்கள் விரைவு படுத்தப்படுகின்றன.

Wednesday, November 17, 2010

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் 'modern messaging system



பல நாள் கேள்விக்கு விடை கிடைத்திவிட்டது. ஃபேஸ்புக் இணைய தளம் புதிதாக அறிவித்திருக்கும் சேவையினை “modern messaging system” என அழைக்கிறது. இது மின்னஞ்ஞல் அல்ல. மின்னஞ்ஞல் எனும் வரைவிலக்கணத்துக்கு அப்பால் பட்டது. மின்னஞ்ஞல் சேவையும் இதில் உள்ளடங்கும்.

ஃபேஸ்புக் இணைய தளம் ஒரு புதிய மின்னஞ்ஞல் சேவையினை அறிமுகப்படுத்தப் போகிறது என உலகமே எதிர்பார்த்திருந்த வேளையில் , அது மின்னஞ்ஞல் அல்ல அதைவிட ஒரு படி மேலான தொடர்பாடல் முறையொன்று என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

இந்த “modern messaging system” மூன்று வகையான எண்ணக்கருக்களை கொண்டுள்ளது.

01. seamless messaging

02. cross-platform conversation history

03. the social inbox.

நீங்கள் விரும்பும் சமயத்தில் உங்களுக்கு @facebook.com எனும் மின்னஞ்ஞல் முகவரி உங்களுக்கு தரப்படும். இங்கு சம்பிரதாயமான மின்னஞ்ஞல் முறை காணப்படாது. யாருடன் வேண்டுமானாலும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த மெசேஜின் முறைமை அமைய இருக்கிறது. மேலும் எமக்கு வரும் தகவல் அனுப்பப்படும் நபரினை பொறுத்து ஒரு சிறப்பான வகைப்படுத்தலும் இங்கு இடம்பெற இருக்கிறது.

சுருக்கமா சொன்னா, ஒரு கூலான தொடர்பாடல் முறையாக இந்தப் புதிய Messaging system அமையவிருக்கின்றது. இந்தப் புதிய சேவையானது இன்னும் சில மாதங்களில் பாவனைக்கு வர காத்திருக்கிறது. பரீட்சாத்தமாக கேட்பவர்க்கு மட்டுமே ஃபேஸ்புக் இந்த புதிய சேவையை தர இருக்கிறது. அதாவது இன்விடேசன் முறைமை.

Monday, November 1, 2010

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க

நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம்.

இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை.
ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.

பயன்கள்:

உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது.

இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.

நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.

வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)

வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.

இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.

பயன் படுத்தும் முறை:

இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.

அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.


அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி

Tuesday, August 10, 2010

கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?

ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.

மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, “சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப் பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

Tuesday, July 20, 2010

இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்

மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய



Sunday, July 18, 2010

பேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'

சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் 'கூகுள் மீ' என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இந்த செய்தியை நம்ப முடியவில்லை எனினும், நம்பத்தகுந்த இடத்திலிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இணையதளங்களான மாஷபிள் மற்றும் டெக்கிரஞ்ச் உள்ளிட்ட தளங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

கூகுள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே, விரைவில் 'கூகுள் மீ' இணையதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள், தென் ஆப்ரிக்காவின் டப்ளின் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக டெக்கிரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Monday, April 19, 2010

உங்கள் கோப்பில் வைரஸ் இருக்கிறதா எளிதாக சோதிக்கலாம்




விண்டோஸ் எக்ஸ்பி-யில் இருந்து விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் உள்ள வைரஸ் கோப்புகளை எளிதாக உடனடியாக கண்டுபிடிக்கலாம்.

நம் கணினியில் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் வைத்திருந்தால் அடுத்த ஆண்டிவைரஸ்-க்கு தேவையான சில கோப்புகளை வைரஸ் இருப்பதாக அறிவிக்கும். சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் கோப்பை வைரஸ் இருப்பதாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளும் மற்றொரு ஆண்டிவைரஸ் மென்பொருள் வைரஸ் இல்லை என்றும் அறிவிக்கும் இந்த நேரத்தில் நாம் அந்த கோப்பில் உண்மையாகவே வைரஸ் இருக்கிறதா என்று இந்த இணையதளம் மூலம் கண்டுபிடிக்கலாம்.

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் வைரஸ் இருக்கிறதா என்று சோதிக்க விரும்பும் நம்முடைய கோப்புகளை choose என்ற பொத்தானை அழுத்தி தேர்ந்தெடுக்க வேண்டும் ஸ்கிரிப்ட் வைரஸ் இருப்பதாக தோன்றினால் அதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அடுத்து எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் இமெயில் முகவரியைம் கொடுத்து Analyse என்ற பொத்தானை அழுத்தி எளிதாக சோதிக்கலாம். சோதிக்கப்பட்டு உடனடியாக நமக்கு இமெயில் மூலம் முடிவு அனுப்பப்படும். இதை சோதிக்க இந்த இணையதளத்தில் எந்த கணக்கும் உருவாக்கத் தேவையில்லை. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, March 16, 2010

அதிவேக Opera பிரவுசர் வெளியீடு


விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50. என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.

இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம்.
புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.

Monday, February 22, 2010

பேஸ்புக்குக்கும்,ட்விட்டர்கும் சவாலாக கூகுள் வண்டு (Buzz)


தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzz)

முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான்.

மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.

இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது 'Buzz' என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.

உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம்.

இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, January 6, 2010

விண்டோஸ் மீடியா ப்ளேயரில் மினி ப்ளேயர்






Windows Media Player -ல் நாம் MP3 பாடல்களை திறக்கையில், முழுத் திரையில் Windows Media Player திறப்பதை கவனித்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும், பாடல்களை கேட்பதற்கு முழுத் திரை தேவையில்லை என்பதால், பயனர்கள் பலரும் Mini Player தோற்றத்தையே விரும்புகிறார்கள்.ஒவ்வொருமுறையும் மினி ப்ளேயர் மோடிற்கு மாற்றுவதை விட, ஒரு குறிப்பிட்ட கோப்பு வடிவிற்கு மட்டும் (உதாரணமாக MP3) அல்லது ஒரு குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகளுக்கு மட்டும் (உதாரணமாக CD/DVD) நிரந்தரமாக மினி ப்ளேயர் மோடை Windows Media Player -ல் உருவாக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

Windows Media Player ஐ திறந்து கொண்டு Options பக்கத்திற்கு செல்லுங்கள். இங்கு Player டேபில் “Start the mini Player for file names that contain this text” என்ற டெக்ஸ்ட் பாக்ஸ் இருப்பதை கவனிக்கலாம்.

உங்களுக்கு அனைத்து எம்பி3 கோப்புகளும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் இந்த டெக்ஸ்ட் பாக்ஸில் .mp3 என டைப் செய்யவும்.



குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகள் மட்டும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் அந்த ட்ரைவ் லெட்டரை மட்டிலும் கொடுத்தால் போதுமானது.





இனி Apply செய்தால் போதும், இதற்கு பின்னர் திறக்கப் படும் கோப்புகள் உங்கள் விருப்பப் படி மினி ப்ளேயரில் திறக்கும்