Sunday, July 26, 2009

மனித மூளை விற்பனைக்கு..!


தலைப்பைப் பார்த்ததும் குழப்பிப் போய் இருப்பீர்களே. ஆம்.. செயற்கையாக தயாரிக்கப்பட்ட மூளைகள் நாளை விற்பனைக்கு வரலாம் என்பது போல செய்தி ஒன்று வந்திருக்கிறது.

செயற்கை முறையில் மனித மூளையைப் போன்ற மூளையை உருவாக்க விஞ்ஞானிகள் 2005ம் ஆண்டில் இருந்து நீல மூளை திட்டத்தின் (Blue Brain Project) கீழ் முயன்று வருகின்றனர். அவர்கள் தற்போது விடுத்திருக்கும் அறிவிப்பின் படி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனித மூளையை ஒத்த மூளையை தாம் செயற்கை முறையில் தயாரித்து விட முடியும் என்று கூறியுள்ளனர்.

மென்பொருட்கள் கொண்டு இயக்கப்படும் ஆயிரக்கணக்கான குறும் இலத்திரனியல் சுற்றுக்களால் ஆன மூளைக்கலங்கள் கொண்டு அமைக்கப்பட உள்ள neocortical column கொண்டு ஆக்கப்பட உள்ளதாம் இந்த மூளை. ஏலவே இதற்கான மென்பொருள் நிலை வடிவம் பெறப்பட்டு விட்டதாம்.

ஒருவேளை இந்தச் செயற்கை மூளை தயாரிக்கப்பட்டால் அது உலகில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள சுமார் 2 பில்லியன் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்கின்றனர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள்.

ஏற்கனவே எலிகளின் மூளையில் உள்ள கூறுகளுக்கு ஒத்த செயற்கையான கூறுகளை விஞ்ஞானிகள் தயாரித்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செயற்கை மூளை தயாரிக்கும் முயற்சி வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்.

நன்றி : விடுப்பு

Thursday, July 23, 2009

வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி


ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு.

Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்பி உட்பூச்சாக பூசப்பட்டிருக்கும். இப்போது பீதியைக்கிளப்பி வரும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிர் உயிரி கண்டுபிடிக்கப்பட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தக்கருவியைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான வைரஸ்நோய்கள் வேகமாகப்பரவுவதை தடுப்பதற்காக இதுபோன்ற விரைவான சோதனைக்கருவிகள் அவசியம் இல்லையா?


வைரஸ்கள் இருப்பதைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி, பாக்டீரியா, புரதங்கள் மற்றும் டி என் ஏ மூலக்கூறுகள் இவற்றையும் இந்தக் கருவியைக்கொண்டு கண்டுபிடிக்க இயலும். இக்கருவியை பயன்படுத்துவோருக்கு சிறப்புப்பயிற்சிகள் ஏதும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.


இந்தக்கருவியில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி ஒரு சின்னஞ்சிறிய ஆய்வகத்தை உள்ளடக்கிய ஒளிஉணரும் ‘சில்லு’ (chip) ஆகும். இரண்டாவது பகுதி எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு (portable detector) ஏற்பியாகும். ‘சில்’லில் உள்ள பல்வேறு துளைகள் வழியாக சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் இரத்தம் அல்லது எச்சில் மாதிரி உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த துளைகளின் உட்புறம் நுண் உயிரிகளுடன் வினைபுரியும் ஏற்பிகள் உட்பூச்சாக பூசப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அதிர்வெண்கொண்ட லேசர் ஒளிக்கற்றையும் இந்த நுண் உயிரிகளுடன் அனுப்பப்படுகிறது. ஏற்பிகளாகிய எதிர் உயிரிகளுடன் வைரஸ்கள் வினைபுரியும்போது லேசர் ஒளிக்கற்றையின் அதிர்வெண் மாறுபடுகிறது. இக்கருவியில் பெறப்படும் அளவீடுகள் மிகநுண்ணியதாக இருப்பதால் குறிப்பிட்ட வைரஸை இனங்காணுவது மிக எளிதான காரியம். மேலும் ஒவ்வொரு வைரஸிற்கும் வெவ்வேறு அளவில் இந்த அதிர்வெண் மாற்றம் இருக்கும்.

நன்றி: விடுப்பு

Thursday, July 9, 2009

அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம்


கூகிள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது .அடுத்த ஆண்டு நடுவில் கூகிள் (Chrome OS) ஆபரேடிங் சிஸ்டம் வெளியிடுகிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.ஓபன் சோர்ஸ் முறையில் அந்த (os) இயங்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது.மேலும் இந்த புதிய (os)லைட் வெயிட் ஆகா இருக்கும் லினக்ஸ் கெர்னலை அடிபடையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய ப்ராஜெக்ட் கூகிள் (android) லிருந்து வித்யாசபடும் என்றும் அறிவித்துள்ளது .

புதிய இயங்குதளம் மூலம் இணையம் தொடர்பான சேவைகளை உடனடியாக பெறமுடியும் என்றும் .மேலும் வைரஸ் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கும் வகையில் இந்த இயங்கு தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் வேகம்,பாதுகாப்பு,எளிமை. அதாவது இந்த புதிய (os) இயக்குவதற்கு வேகமாகவும் ,வைரஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாவும் ,பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.இந்த இயங்கு தளம் இணையத்தை அடிபடையாக கொண்டு இயங்கும் என்றும் அதனால் ஏற்கனவே உள்ள இணையம் தொடர்பான (web based applications)மென் பொருட்கள் எந்த மாற்றமும் செய்யாமல் இதில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் (netbooks)இக்கு கூகிள் கிரோம் (0s)வெளியிடப்படும் பின்பு ஆல்பா பதிப்பு வெளியிட்டு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ள படும் என்று கூறியுள்ளது .

கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் கடும் போட்டி நிலவும்.கூகுளின் சவாலை மைக்ரோசாப்ட் சமாளிக்குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்போம் .

Thursday, July 2, 2009

உண்மை கண்டறிதல் சோதனை : Skype உரையாடலில்
Skype மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், நாள் தோறும் இலவச இணைய அரட்டை (Voice conference) அடிக்கிறார்கள். அதில் எத்தனை பேர் உண்மை பேசுகிறார்கள்? என்பது கேள்விக்குறியே.

பொய் பேசுபவர்கள் யார்? என்பதை அறிவதற்கு ராணுவம், காவல்துறையினர் லைடிடக்டர் @ Lie Detector என்கிற கருவியைப் பயன்படுத்துவார்கள். பொய் பேசுபவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் @ Stress அதிகமாக இருக்கும். அவர்களுடைய ஸ்ட்ரெஸ் அதிகரித்து நாடித்துடிப்பிலிருந்து, இதயத்துடிப்பு (heart beat) வரை அதிகரித்திருக்கும். அதன் அலைவரிசையை ஒரு படமாக (chart) வரைந்தால் அது காட்டிக்கொடுத்துவிடும்.

குரல் நாண்களில் இருந்து வெளிப்படும் ஒலியை இந்த மென்பொருள் கண்டறிந்து ஒருவர் பொய் பேசுகிறாரா? என்பதை அறியத் தருகிறது.

Skype
மென்பொருளையும் , இந்த உண்மை கண்டறிவதற்கான மென்பொருளையும் நிறுவிவிட வேண்டும்.

ஸ்கைப் வாயிலாக உரையாடல் நிகழும்போது, முதல் 10 வினாடிகளில் இந்த மென்பொருள் சில நடவடிக்கைகளை எடுக்கும். எதிர்முனையில் இருந்து பேசுபவரின் மன அழுத்தம் @ Stressஸை கணக்கில் கொண்டு கணினியின் திரையில் ஒரு மீட்டர் காண்பிக்கப்படும். அதில் தெரியும் Pointer ஆனது ஒருவர் பொய் பேசுகிறாரா? உண்மை பேசுகிறாரா? என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

தரையிறக்கம் செய்து கொள்ள.