Thursday, October 29, 2009

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்


வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம். வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.

அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள்.

அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, அப்போது நடந்த அந்த மாணவர்களது தேர்வு முடிவும் உறுதி செய்தது.

அதாவது, அந்த தேர்வில் மேற்படி மாணவர்கள் அனைவரும் வழக்கமாக பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்பதால், நீங்களும் குறைந்த விலையில் எளிதாக எங்கும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் வாங்கி சாப்பிடலாமே…

Tuesday, October 13, 2009

மர்மமான கூகுல்


கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து.

மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல எங்கிருந்தோ எடுக்கப்பட்ட ஒரு முடிவு வந்து நிற்கும்.

அநேக‌மாக‌ உங்க‌ளுக்கு முன் கூகுலில் தேடிய‌ ந‌ப‌ர் பார்த்த‌ இணைய‌ப‌க்க‌ம் மர்ம‌ கூகுலால் காட்ட‌ப்ப‌டும்.

ஒரு மெலிதான‌ ஆச்ச‌ர்ய‌த்தை அளித்து நீங்க‌ள் பார்க்க‌ வாய்ப்பில்லாத‌ புதிய‌ த‌ள‌த்தை உங்க‌ள் பார்வைக்கு வைத்து புதிய‌ அனுப‌வ‌ம் அளிப்ப‌தே இந்த‌ சேவையிப் நோக்க‌ம்.ப‌ல‌ நேர‌ங்க‌ளில் மர்ம‌ கூகுல் அழைத்துச்செல்லும் த‌ள‌ம் முற்றிலும் எதிர்பாராததாக ஆனால் சுவையான‌தாக‌ இருக்கிற‌து.

நெத்திய‌டி போல‌ தேட‌ல் முடிவுக‌ளை த‌ருவ‌தாக தேடியந்திரங்கள் பெருமைப்ப‌ட்டுக்கொள்ளும் நிலையில் தேட‌லில் சூவார்ஸ்ய‌த்தை புக்குத்தும் வ‌கையில் இந்த‌ சேவையை அறிமுக‌ம் செய்யப்பட்டுள்ள‌து.