Wednesday, June 15, 2011

உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு


உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது. இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது.

இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம்.

இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ்)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும். முன் போல இணையதளம் அமைப்பது இல்லாமல் இப்போது மிகவும் எளிதாகி விட்டாலும் கூட இணைய சாமன்யர்களுக்கு ஒரு இணையதளத்தை தாங்களே உருவாக்கி கொள்வது என்பது கொஞ்சம் மிரட்சி அளிக்கலாம்.

ஓரளவுக்கேனும் எச்.டி.எம்.எல் போன்றவையும் குறித்த பரிட்சயம் இருந்தால் தான் இணையத்தில் உள்ள கருவிகளை கொண்டு இணையதளத்தை அமைப்பது சாத்தியம். இவையெல்லாம் தேவையேயில்லை. இணையதளம் தேவை என்ற விருப்பம் இருந்தால் போதும் புதிய தளத்தை உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறோம் என உற்சாகம் அளிக்கிறது பிரேவ்சைட்ஸ்.

வடிவமைப்பு போன்றவற்றையும் இந்த தளமே பார்த்து கொள்கிறது. பிரவுசரிலிருந்தே தளத்தில் தகவல்களை இடம் பெற வைக்கும் வசதி, மின்னஞ்சல், வலைப்பதிவு வசதி போன்றவரை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்று இந்த தளம் உறுதி அளிக்கிறது.

தனி நபர்கள், இசை கலைஞரகள், வர்த்தக பிரிவினர் என அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிற‌து. உங்கள் தளத்தை இன்றே உருவாக்கி கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதை நிறைவேற்றி தருகிறது என்றாலும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான சேவைகளை போலவே இந்த தளமும் அடிப்படையான தளத்தை மட்டுமே இலவசமாக உருவாகி கொள்ள உதவுகிறது. அந்த இலவச தளத்தில் இட வசதி மற்றும் கூடுதல் அம்சங்களும் குறைவு என்று தான் சொல்ல‌ வேண்டும். முழு வீச்சிலான‌ இணைய‌த‌ளம் தேவை என்றால் க‌ட்ட‌ண‌ சேவைக்கு தான் செல்ல‌ வேண்டும். ஆனால் எளிதான‌து விரைவான‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

இணையதள முகவரி

நன்றி : விடுப்பு

Monday, April 18, 2011

இணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க

நம்மில் பெரும்பாலான இணைய பயனாளர்கள் Facebook, Orkut, Youtube போன்ற சில இணையதளங்களுக்கு அடிமையாகி விடுகிறோம்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும் தான் இந்த தளங்களுக்கு செலவழிக்க வேண்டும் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றோ பல சமயங்களில் நினைத்திருப்போம். ஆனால் மறுநாளே மறந்து போய் பழையபடி நமது நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைவது Chrome Nanny எனும் ஒரு பயனுள்ள நீட்சி. கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து இந்த நீட்சியை உங்கள் குரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு நிறுவப்பட்டதற்கான அறிவிப்பை திரையில் அதற்குரிய ஐகானுடன் காணலாம்.

இந்த ஐகானை வலது கிளிக் செய்து Options வசதியை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் திரையில் Blocked URLs டேபில், Block set Name என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் தேவையான பெயரை கொடுங்கள். அடுத்துள்ள URLs பெட்டியில் எந்தெந்த தளங்களை தடை செய்ய வேண்டுமோ அவற்றின் வலைத்தள முகவரிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக டைப் செய்யுங்கள்.

அடுத்துள்ள Block Time பகுதிக்கு நேராக உள்ள பெட்டியில் எந்தெந்த நேரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதை கொடுங்கள். (உதாரணமாக 1000-1300)

அடுத்து Apply on Days பகுதியில் எந்தெந்த நாட்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொண்டு Save URL பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்தால் போதும். இனி தடை செய்யப்பட நேரங்களில் குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு செல்ல முயற்சிக்கையில் ஒரு செய்தி மட்டுமே திரையில் தோன்றும்.

ஒருவேளை குறிப்பிட்ட நேரத்தில் என்றில்லாமல் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே அந்த குறிப்பிட்ட தளங்களில் பணிபுரிய அனுமதி வேண்டும் எனில், இந்த பகுதியில் உள்ள Blocked Time க்கு நேராக 0000-0000 என கொடுத்து Max Time In a Day என்பதற்கு நேராக 60 என கொடுத்து Save URL பொத்தானை சொடுக்கினால் போதுமானது.

இது போன்று தடை செய்யப்பட்ட தளங்களுக்கு செல்ல முயலும் பொழுது திரையில் தோன்றும் செய்திக்கு பதிலாக, அந்த குறிப்பிட்ட டேபை மூட வேண்டும் என்றாலோ அல்லது மற்றொரு தளத்திற்கு Redirect ஆக வேண்டும் என்றாலோ, இந்த நீட்சியின் Options பகுதிக்கு சென்று General Options டேபிற்கு சென்று நமது தேவைக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இது தவிர மேலும் பல வசதிகளை இந்த நீட்சி உள்ளடக்கியுள்ளது.

தரவிறக்க சுட்டி

Tuesday, April 12, 2011

கூகுளில் இலகுவாக நமக்கு வேண்டியதை தேடுவதற்கு


நாம் நமக்குத் தேவையான இணையத்தளங்கள், பாடல்கள், படங்கள் போன்ற எந்தத் தகவல்களையும் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ள நாம் Google, Yahoo, Bing போன்ற தேடியியந்திரங்களையே பயன்படுத்துகின்றோம்.

இவற்றுள் நாம் பொதுவாக கூகுளையே பயன்படுத்துவதுண்டு. இத்தேடியியந்திரங்களில் நாம் தேடவேண்டியவற்றை சரியாகக் கொடுக்க தவறும் பட்சத்தில் நமது தேடுதலில் முழுமையான பலனை அடைய முடியாது.

எனவே கூகுளில் தேடும் போது முழுமையான பலனை அடைவதற்காக உங்களுக்கென்றே ஒரு இணையத்தளம் உள்ளது. இதில் கூகுள் தேடலானது பலவகையாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எதை பற்றி தேடப்போகின்றோமோ அதற்குரிய இடத்தில் தேடுவதன் மூலம் நாம் தேடும் காலத்தைக் குறைக்கலாம். மேலும் தேடலில் முழுமையான பலனையும் எதிர்பார்க்கலாம்.

இணையதள முகவரி

Saturday, April 9, 2011

பாதுகாப்பான இணையதளத்தை அறிய வேண்டுமா?குறிப்பாக எந்த வகையில் பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதன் முகவரியில் http:// என்று வழக்கமாக இருக்கும் இடத்தில் https:// என்று இருந்தால் அது பாதுகாப்பானது.

இதன் உறுதியான, பாதுகாப்பான நிலையில் நம்பிக்கை வைத்து தகவல்களைத் தரலாம். இன்னொரு வழியும் உள்ளது.

http://www.google.com/safebrowsing/diagnostic?site=“ ” என டைப் செய்து மேற்கோள் குறிகளுக்கிடையே அந்தக் குறியீடுகள் இல்லாமல் அந்த தளத்தின் முகவரி கொடுத்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் தரவும்.

அந்த தளம் குறித்த தகவல்கள், அதன் தன்மை குறித்த விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கடந்த 60 அல்லது 90 நாட்களில் அந்த தளத்தினை கூகுள் நிறுவனம் சென்று வந்தது எனவும், எந்த வித கெடுதல் விளைவிக்கும் மென்பொருள் தொகுப்பினை அது பரவவிடவில்லை எனவும் சான்றிதழ் கிடைக்கும்.

மோசமான தளமாக இருந்தால் அதன் தன்மை குறித்து தகவல் இருக்கும்.

Saturday, January 15, 2011

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?

நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம்.

இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?

நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ் (anti-virus) ஒன்றை நிறுவுங்கள், அதுவும் எந்நாளும் update செய்து கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறன அன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது. ஆயினும் Microsoft நிறுவனத்தின் Microsoft Essentials மிகச்சிறந்த இலவச அன்டி வைரஸ் ஆகும். இது விரைவானதும், சிறிய அளவிலான memory யே தேவைப்படுகிறது, இது licensed வின்டோஸ் இயங்குதளங்களிலேயே பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்திப் பாருங்கள் "சிறந்த ஒரு அன்டி வைரஸ்" நீங்களே உணர்வீர்கள்......

இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.

02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்

03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.

04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.

05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது திறக்காது.

வைரஸ் தாக்கிய பென் ட்ரைவ் ஒன்றை திறப்பது எப்படி?

எப்பொழுதும் பென் ட்ரைவ்வை double கிலிக் செய்து திறக்காதீர்கள். இங்கு ஒரு இலகுவான வழியொன்றை தருகிறேன்.

01. Run command ஐ (Ctrl + R) திறந்து drive வின் எழுத்தை கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.

இவ்வாறு open செய்யும் போது வைரஸ் நம் கணணிக்குள் உட்புகாது. இப்போது பென்டரைவரில் உங்களுக்கு தேவையானவற்றை