Monday, April 6, 2009

பாலில் உருவாகும் பாக்டீரியா



பால் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது.பொதுவாக பாலை காய்ச்சி குடிப்பவர்கள் ஒருபுறம் என்றால்,வேறு சிலர் பச்சைப் பாலை (கறந்த பால்) அப்படியே குடிப்பார்கள்.ஆனால்,பச்சைப் பாலில் (raw milk) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த வெப்பநிலையிலும், குளிர்வூட்டப்பட்ட போதிலும் இந்த பாக்டீரியா வளரக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மால்கா ஹால்பெர்ன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து பச்சைப் பாலில் பாக்டீரிய இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்தவகை பாக்டீரியாவை முன்னர் ஆய்வு செய்தவர்கள் வெளியிடவில்லை என்றும் டாக்டர் மால்கா குறிப்பிட்டுள்ளார்.

கிறிசியோபாக்டீரியம் ஒரானிமென்ஸ் என்ற அந்த நுண்ணுயிரியானது குளிர்ந்த வெப்பநிலையிலும் கூட பாலில் பரவக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் பாலைக் காய்ச்சாமல் குடிப்பதால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

மாட்டில் இருந்து கறக்கப்படும் பாலானது பல்வேறு காரணங்களால் கெட்டுப் போகக்கூடும் என்பதால்,பாலை குளிரூட்டி பதப்படுத்துதலை பொதுவாக மேற்கொள்வார்கள்.

ஆனால்,குளிரூட்டப்பட்டாலும்,கிறிசியோபாக்டீரியம் காரணமாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.


2 comments:

Divya said...

நல்ல தகவல்:))

Gajani said...

நன்றி