Monday, April 18, 2011

இணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க

நம்மில் பெரும்பாலான இணைய பயனாளர்கள் Facebook, Orkut, Youtube போன்ற சில இணையதளங்களுக்கு அடிமையாகி விடுகிறோம்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும் தான் இந்த தளங்களுக்கு செலவழிக்க வேண்டும் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றோ பல சமயங்களில் நினைத்திருப்போம். ஆனால் மறுநாளே மறந்து போய் பழையபடி நமது நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைவது Chrome Nanny எனும் ஒரு பயனுள்ள நீட்சி. கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து இந்த நீட்சியை உங்கள் குரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு நிறுவப்பட்டதற்கான அறிவிப்பை திரையில் அதற்குரிய ஐகானுடன் காணலாம்.

இந்த ஐகானை வலது கிளிக் செய்து Options வசதியை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் திரையில் Blocked URLs டேபில், Block set Name என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் தேவையான பெயரை கொடுங்கள். அடுத்துள்ள URLs பெட்டியில் எந்தெந்த தளங்களை தடை செய்ய வேண்டுமோ அவற்றின் வலைத்தள முகவரிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக டைப் செய்யுங்கள்.

அடுத்துள்ள Block Time பகுதிக்கு நேராக உள்ள பெட்டியில் எந்தெந்த நேரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதை கொடுங்கள். (உதாரணமாக 1000-1300)

அடுத்து Apply on Days பகுதியில் எந்தெந்த நாட்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொண்டு Save URL பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்தால் போதும். இனி தடை செய்யப்பட நேரங்களில் குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு செல்ல முயற்சிக்கையில் ஒரு செய்தி மட்டுமே திரையில் தோன்றும்.

ஒருவேளை குறிப்பிட்ட நேரத்தில் என்றில்லாமல் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே அந்த குறிப்பிட்ட தளங்களில் பணிபுரிய அனுமதி வேண்டும் எனில், இந்த பகுதியில் உள்ள Blocked Time க்கு நேராக 0000-0000 என கொடுத்து Max Time In a Day என்பதற்கு நேராக 60 என கொடுத்து Save URL பொத்தானை சொடுக்கினால் போதுமானது.

இது போன்று தடை செய்யப்பட்ட தளங்களுக்கு செல்ல முயலும் பொழுது திரையில் தோன்றும் செய்திக்கு பதிலாக, அந்த குறிப்பிட்ட டேபை மூட வேண்டும் என்றாலோ அல்லது மற்றொரு தளத்திற்கு Redirect ஆக வேண்டும் என்றாலோ, இந்த நீட்சியின் Options பகுதிக்கு சென்று General Options டேபிற்கு சென்று நமது தேவைக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இது தவிர மேலும் பல வசதிகளை இந்த நீட்சி உள்ளடக்கியுள்ளது.

தரவிறக்க சுட்டி

No comments: