Thursday, October 29, 2009

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்


வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம். வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.

அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள்.

அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, அப்போது நடந்த அந்த மாணவர்களது தேர்வு முடிவும் உறுதி செய்தது.

அதாவது, அந்த தேர்வில் மேற்படி மாணவர்கள் அனைவரும் வழக்கமாக பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்பதால், நீங்களும் குறைந்த விலையில் எளிதாக எங்கும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் வாங்கி சாப்பிடலாமே…

4 comments:

சுந்தரா said...

அட! அது இதுக்குத்தானா?

பள்ளியில் படிச்சப்ப, பரிட்சைக்குப் போகும்முன்னால் விடுதியில் எல்லாருக்கும் ஒரு வாழைப்பழம் கொடுப்பாங்க...

முனைவர் இரா.குணசீலன் said...

அட!!!

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல தகவலா இருக்குதே...

ராஜன் said...

Please remove the Tamil FM's "Auto play" option. Thanks