Thursday, May 14, 2009

புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட ஆயுள்: ஆய்வுத் தகவல்


புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழலாம் என பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகைபிடிக்காதவர்கள் உடல்நிலை குறித்து ஓஸ்லோ பல்கலைக்கழகமும், நார்வே பொதுசுகாதார நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.

முப்பது ஆண்டுகளாக நார்வே நாட்டு மக்களில் புகைப்பழக்கம் உள்ள நடுத்தர வயது ஆண், பெண்களிடம் 1974 முதல் தொடர்ந்து நடத்திய ஆய்வில், புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழமுடியும் என்றும், இவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரியவந்துள்ளது.

ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஓஸ்லோ பல்கலைக்கழக ஆசிரியர் ஹாகோன் மேயர் புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த படத்தினை வெளியிட்டிருப்பதாகக் கூறினார்.

4 comments:

ராஜ நடராஜன் said...

இதையெல்லாம் தம் அடிக்கிற ஆட்கள் கிட்ட சொல்ல வேண்டிய விசயம்:)

Kajan said...

Then I have long life. :))

ராஜ நடராஜன் said...

எனக்குத் தெரிந்து தம் அடிக்கிற ஆட்களும் நல்லாவே இருக்கிறார்கள்.(உடலின் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது என்றும் எடுத்துக் கொள்ளலாமா?)

Suresh said...

கிளம்பிட்டாங்களா அப்போ எங்க தலைவர் தான் அதிக நாள் வாழுவாரு