Sunday, March 29, 2009

சுடச் சுட டீ குடிக்கறீங்களா?தொண்டைப் புற்றுநோய் வரும்,உஷார்!

ஆவி பறக்கும் சூடான டீயை குடிப்பவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமிருப்பதாக பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான தேநீர் அருந்துவதால் உணவுக் குழாய் மற்றும் வாய்க்கும்,உணவுக் குழாய்க்கும் இடையே உள்ள பகுதியில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு எட்டு மடங்கு அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

ஈரானிலுள்ள டெக்ரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழக முதன்மை ஆராய்ச்சியாளர் ரேஸா மலேக்ஸாதே இது குறித்து தெரிவிக்கையில்,சூடான டீ பருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம்,தொண்டைப் புற்றுநோயைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300-பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும்,புற்றுநோயால் பாதிக்கப்படாத 571-பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும் ஆராய்ச்சி செய்து இந்த முடிவை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

கோப்பையில் தேநீர் ஊற்றப்பட்ட 4-நிமிஷத்திற்குள் அல்லது அதற்கும் அதிகமான நேரத்திற்குள் தேநீர் பருகுபவர்களைவிட,தேநீர் ஊற்றப்பட்ட 2-நிமிஷத்துக்குள்,அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் பருகி முடிப்பவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு 5-மடங்கு அதிகமாக உள்ளதாக அந்த ஆராய்ச்சி மேலும் கூறுகிறது.

இருப்பினும் தேநீர் குடிக்கும் அளவுக்கும்,புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

2 comments:

Kajan said...

நன்றி. இன்றிலிருந்து என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.

Gajani said...

Thank you